குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு நகராட்சி அதிகாரிகளை பள்ளிக்கூடத்தில் சிறைவைத்து பொதுமக்கள் போராட்டம்
நெல்லிக்குப்பத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை பள்ளிக்கூடத்தில் சிறைவைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட மேல்பாதி அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கொட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கிடங்கு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தபகுதியில் இதுவரை குப்பைகொட்டப்படவில்லை.
இந்தநிலையில் மேலும் ரூ.2 கோடியே 8 லட்சம் செலவில் மீண்டும் அந்த இடத்தில் குப்பைகொட்டுவதற்கான கிடங்கு அமைப்பதற்கு நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்கினர். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை அந்த பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் இந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு கிடங்கு அமைக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் இந்த இடத்தில் குப்பைகொட்டுவதற்கான கிடங்கு அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நெல்லிக்குப்பம் மேல்பாதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மகாராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அந்த பகுதி பொதுமக்கள், இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குப்பை கொட்ட கிடங்கு அமைத்தால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உருவாகும். இதனால் இந்த பகுதியில் குப்பை கொட்டும் கிடங்கு அமைக்க வேண்டாம் என கூறி நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளை பள்ளி வளாகத்தின் உள்ளே வைத்து நுழைவு வாயில் கதவை பூட்டி சிறைவைத்தனர். மேலும் அந்த பகுதியில் குப்பை கொட்ட கிடங்கு அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறை வைக்கப்பட்ட அதிகாரிகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story