கடலூரில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:30 AM IST (Updated: 11 Feb 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவது தொடர்பாக அரசு தரப்புக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கண்டித்தும், ஊதிய உயர்வு தொடர்பாக வேலை நிறுத்தம் செய்த போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 8 நாள் சம்பளத்தை வழங்கக்கோரியும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பி.பழனிவேல் தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் தங்க ஆனந்தன், சி.ஐ.டி.யு. சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் மணிமாறன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரமணி, அம்பேத்கார் தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன், தமிழக வாழ்வுரிமை சங்க பொதுச்செயலாளர் தணிகாசலம், ஐ.என்.டி.யு.சி. துணைத்தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. துணைப்பொதுச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். 

Next Story