அய்யங்கொல்லி அருகே குடிநீர் தேடி தொலைதூரம் செல்லும் ஆதிவாசி மக்கள்
அய்யங்கொல்லி அருகே குடிநீர் தேடி ஆதிவாசி மக்கள் தொலைதூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே கிணற்றை தூர்வாரி தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே கூழால் குட்டன்மேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. இதுதவிர 100-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. அங்கிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் கள் உடைந்து மோசமாக கிடக் கிறது. இதனால் தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. இதன் காரணமாக ஆதிவாசி, பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே தொலைதூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலைக்கு ஆதிவாசி, பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் ஆபத்தான நிலையில் தண்ணீரை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக ஆதிவாசி மக்கள் கவலையுடன் கூறினர். இனி வரும் நாட்கள் கோடை காலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் கிணற்றில் தண்ணீர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய்களும் பழுதடைந்து கிடப்பதால் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் குடிநீர் பிரச்சினை தலைதூக்குவதற்குள் பழுதடைந்த குழாய்களை மாற்ற வேண்டும். கிணற்றை தூர்வாரி பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story