பாரதியார் பல்கலைக்கழகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு; பேராசிரியர் பணி கிடைக்காதவர்களை அழைத்து லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்காதவர்களை அழைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி(வயது 67). இவர் பேராசிரியர் பணிநியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவர்களுக்கு உதவிய தொலைத்தூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சப்பணத்தை மறைக்க முயன்றதாக துணைவேந்தரின் மனைவி சொர்ணலதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஒரு வாரத்தில் 3 முறை பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணைவேந்தர் அறை, பதிவாளர் அறைகளில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த ஆவணங்களை காட்டி துணைவேந்தரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுக்க மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணை நாளை(திங்கட்கிழமை) கோவை லஞ்சஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இதற்கிடையே துணைவேந்தர் கணபதிக்கு எதிரான ஆவணங்களை தயார் செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துணைவேந்தர் கணபதி 82 பேராசிரியர்களை பணி நியமனம் செய்ததில் பல்கலைக்கழகத்தின் விதிகளை மீறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு முறைகேடாக செயல்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது. இந்த பணிக்கு 1,462 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து லஞ்சஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையில் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது துணைவேந்தர் கணபதி கைதாகியுள்ள நிலையில், இந்த விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் பணிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வந்து போலீசாரின் விசாரணைக்கு பதில் அளித்து வருகிறார்கள்.
நேர்முக தேர்வை எத்தனை ஆசிரியர்கள் நடத்தினார்கள்? அவர்கள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர்? நேர்முக தேர்வு முடிந்து பணி தொடர்பாக பேரம் பேசப்பட்டதா? என்று விசாரணை நடத்தினர். பணி கிடைக்காததன் காரணம் என்ன? பணி கிடைத்தவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தார்களா? எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இவர்கள் அளித்த பதில்கள் இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணைவேந்தர் கணபதி பதவியேற்ற நாளில் இருந்தே தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் மட்டுமே எழுந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. தற்போது லஞ்சம் வாங்கிய போது வசமாக சிக்கி கொண்டதால் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்.

Related Tags :
Next Story