அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம் - தங்கதமிழ்செல்வன் பேட்டி


அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம் - தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் தொண்டர்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்று டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் கூறினார்.

ஆண்டிப்பட்டி,

தேனியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து தங்கதமிழ்செல்வன் வந்தார். அவருக்கு ஆண்டிப்பட்டியில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 6 அமைச்சர்களை நீக்கினால் ஜெயலலிதா வழியிலான ஆட்சியை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று நீங்கள் கூறியதற்கு, ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் உள்ளது என்றும், உடன் இருப்பவர்களை திருப்திப்படுத்தவே தங்கதமிழ்செல்வன் கூறுகிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:- நாங்கள் எப்போதும் நடப்பதை மட்டுமே பேசுவோம். இதையும் கூறியிருக்கிறோம். நடக்கிறதா? இல்லையா? என்பதை எங்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் பாருங்கள். அதற்கு பின்னராவது அவர்களுக்கு புரிந்தால் சரி. தற்போது வரையில் அவர்கள் அதிகார போதையில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தவுடன் இந்த 6 பேரும் புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள்.

கேள்வி:- அவ்வாறு அமைச்சர்கள் உங்கள் அணிக்கு வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- ஒருவேளை மனம் திருந்தி வந்தால் எங்களின் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி அவர்களை ஏற்றுக்கொள்வோம்.

கேள்வி:- உங்களின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் தவிர மற்ற அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனரே?

பதில்:- மற்ற அமைச்சர்கள் எல்லாம் தற்போது சந்தோஷப்படுகின்றனர். ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவர்களுக்கும் அதுதான் நடக்க போகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார். 

Next Story