அ.தி.மு.க.வில் தினகரன் நுழைந்ததால் தான் குழப்பம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க.வில் தினகரன் நுழைந்ததால் தான் குழப்பம் ஏற்பட்டது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், வட்ட செயலாளர்கள் திருநகர் பாலமுருகன், பொன் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:- உலகத்திலேயே கட்சி தலைவர், தலைவி பிறந்த நாள் கொண்டாடி ஏழை எளியோர்களுக்கு அன்னதானம், ரத்ததானம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யக் கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே வருகிற 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று முதலில் தீர்மானம் போட சொன்னது நான் தான். தமிழக முதலமைச்சராக அவரே வர வேண்டும் என்று முதலில் சொன்னதும் நான் தான். அதை நான் மறுக்கவில்லை.
எதற்காக அவ்வாறு சொன்னேன் என்றால் அம்மாவின் ஆட்சியையும் அ.தி.மு.க. கட்சியையும் சசிகலா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் நிலை மாறி விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் மூத்த உறுப்பினர்களான 2 சகோதரர்கள் தாய் உள்ளத்தோடு, கட்சியின் தொண்டர்களை பிள்ளைகளாய் அரவணைத்து கட்சியை காப்பாற்றி வருகின்றனர்.
1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் ஒருவர் (தினகரன்) நுழைந்ததால் தான் குழப்பம். அவர்கள் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தங்களின் சுயநலத்திற்காக வசைபாடும் அவர்கள் ஒடி போய் விடுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்களுக்கு பதவி கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டால் நான் எனது பதவியை ராஜினமா செய்வேன். உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், நீதிபதி, பெரியபுள்ளான், சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story