ராஜபாளையம் நகராட்சியில் மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ராஜ பாளையம் நகராட்சியில் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை செய்து பணிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம், சத்திரப்பட்டி சாலையில் ரெயில்வே மேம்பாலம், புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. இந்த திட்டத்தை காட்டி வரி உயர்வு செய்யப்பட மாட்டாது. ராஜபாளையத்தில் மக்களின் பொருளாதார நிலை க்கு ஏற்ப நகராட்சியால் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.
வரி விதிப்பில் பாரபட்சம் ஏற்படும் நிலையை தவிர்க்கவே வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பேசாமல் இருந்தாலும் அரசியல் கட்சியினர் தூண்டி விட்டு பொது மக்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்து வருவார்கள். விவரம் தெரிந்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். இந்த வருடம் மழை வந்ததால் குடிநீர் பஞ்சம் இல்லை. இல்லையேல் கடும் பஞ்சத்தை சந்திக்க நேரிடும். இந்த திட்டத்தால் மக்கள் லாபமடைவார்கள்.
ரெயில்வே பாலம் உள்பட 3 திட்டம் செயல்படுத்த உள்ளோம். புறவழிச்சாலை பணிகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். விரைவில் தொடங்கப்படும். திட்டங்கள் செயல்படுத்தும் போது சிலர் நீதிமன்றத்தை நாடுவதால் தாமதம் ஏற்படுகிறது.
ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நல்ல முடிவு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஏரிகள், குளம், குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பட்டாசு பிரச்சினையில் 30 பேர் சென்று மத்திய மந்திரிகளிடம் தமிழகத்தின் குறைகளை கூறினோம். தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம். இவ்வாறு கூறினார். கலெக்டர் சிவஞானம், சந்திரபிரபா எம்.எல்.ஏ, நகராட்சி ஆணையர் சசிகலா, அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story