தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 728 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 728 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி,
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த மக்கள் நீதிமன்றத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம், விபத்து வழக்குகள் தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி சீதாராமன், குடும்பநல நீதிபதி சந்திரன், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மணி, சார்பு நீதிபதி சண்முகவேல், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஜீவாபாண்டியன், ஓய்வுபெற்ற நீதிபதி பாலு ஆகியோர் நடத்தினார்கள்.
மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,743 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்குதாரர்கள், எதிர் தரப்பினர் மற்றும் வக்கீல்களிடம் கலந்து பேசி வழக்குகளுக்கு சமசர தீர்வு காணப்பட்டது. இதன்படி விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தீர்வு காணக் கூடிய குற்ற வழக்குகள் பிரிவில் மொத்தம் 584 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 86 லட்சத்து 13 ஆயிரத்து 17 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. குடும்ப நல வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், பிரிந்து வாழ்ந்து வந்த சில தம்பதிகளுக்கு அறிவுரைகள் கூறி அவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்தி சேர்த்து வைத்தனர். இதேபோல் வங்கி வாராக்கடன் தொடர்பான 144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.91 லட்சத்து 28 ஆயிரத்து 700 தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 728 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Related Tags :
Next Story