திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம், மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணி மற்றும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலப்பாதையை வலம் வந்து வழிபடுகின்றனர். கிரிவலப்பாதையில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும்போது நெரிசலும் ஏற்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதியன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரூ.65 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, வடிகால் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில் கிரிவலப்பாதையில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது வருகிறது. இதன்படி, திருவண்ணாமலை காஞ்சி சாலையில், அண்ணா வளைவில் இருந்து 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறமும் பக்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 8 இடங்களில் சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் 2.6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று இந்த பணியை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பூபாலன், உதவி கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story