மாயமான பெண் என்ஜினீயர் கருகிய நிலையில் பிணமாக மீட்பு
பெங்களூருவில், மாயமான கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொன்று எரித்ததாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சூளகிரி போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அங்கு இறந்து கிடந்தவர் பெங்களூரு ஹெப்பால் அருகே உள்ள சககாரா நகரில் வசித்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான அக்ஷதா (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. மேலும், பெங்களூரு எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் அக்ஷதா மாயமாகி உள்ளதாக அவருடைய தாய் புகார் கொடுத்து இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், அக்ஷதாவை கொன்று உடலை எரித்து நாடகமாடியதாக கூறி அவருடைய கணவர் சந்திரகாந்த் (35), சந்திரகாந்தின் நண்பர் ராஜ்விந்தர் சிங் ஆகியோரை பெங்களூரு எஸ்.ஆர். நகர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெங்களூரு ஹெப்பால் அருகே உள்ள சககாரா நகரில் வசித்து வருபவர் சந்திரகாந்த். இவருடைய மனைவி அக்ஷதா. வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். சந்திரகாந்த் சொகுசு ஓட்டல் நடத்தி வருகிறார். அக்ஷதா பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக அக்ஷதாவின் நடத்தையில் சந்திரகாந்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜனவரி) 6-ம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரகாந்த், கழுத்தை நெரித்தும், மூச்சுத்திணறடித்தும் அக்ஷதாவை கொலை செய்தார்.
பின்னர், கொலையை மறைக்க முடிவு செய்த அவர் தனது நண்பர் ராஜ்விந்தர் சிங் கிடம் உதவி கேட்டுள்ளார். அவர் உதவி செய்வதாக கூறியதை தொடர்ந்து அக்ஷதாவின் உடலை போர்வையில் சுருட்டி கட்டிய சந்திரகாந்த், அதை அவருடைய காரில் வைத்தார். பின்னர், அந்த காரை ராஜ்விந்தர் சிங் தமிழ்நாடு சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டிக்கு ஓட்டி சென்று அங்கு வைத்து அக்ஷதாவின் உடலை தீவைத்து எரித்துள்ளார்.
மேலும், உடனடியாக பெங்களூரு திரும்ப வேண்டாம் என சந்திரகாந்த், ராஜ்விந்தர் சிங்கிடம் கூறி இருந்ததால் அவர் அக்ஷதாவின் செல்போனை வைத்து கொண்டு பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்பட வெவ்வேறு மாநிலங்களுக்கு சந்திரகாந்தின் காரில் சென்றுள்ளார். இதற்கிடையே, அக்ஷதாவின் செல்போனுக்கு அவருடைய தாய் போன் செய்து உள்ளார். போனை அவர் எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த அவர் தனது மகள் குறித்து சந்திரகாந்திடம் கேட்டுள்ளார். அப்போது, அவர் அக்ஷதா தன்னிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு வெளிமாநிலங்களுக்கு தனது காரில் சுற்றுலா சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும், செல்போனை எடுக்காததால் அக்ஷதா மாயமாகி உள்ளதாக எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் அளிக்க சந்திரகாந்த் கூறியுள்ளார். இதை கேட்ட அக்ஷதாவின் தாயும் எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்டமாக போலீசார் அக்ஷதாவின் செல்போன் சிக்னலை கண்காணித்தனர். அப்போது, அந்த செல்போன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலங்களில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அக்ஷதாவின் எண்ணுக்கு போன் செய்தால் அதை யாரும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், சந்திரகாந்த் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சந்திரகாந்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நடத்தையில் சந்தேகப்பட்டு அக்ஷதாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அத்துடன், அவருடைய நண்பர் ராஜ்விந்தர் சிங் உதவியுடன் அக்ஷதாவின் உடலை எரித்து கொலையை மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது.
மேலும், அவருடைய நண்பர் ராஜ்விந்தர் சிங் போலீசாரின் விசாரணையை திசைதிருப்பும் வகையில் அக்ஷதாவின் செல்போனை காரில் வைத்து கொண்டு வெளிமாநிலங்களில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்திரகாந்த், அவருடைய நண்பர் ராஜ்விந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story