பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் காங்கிரசில் சேர முடிவு


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் காங்கிரசில் சேர முடிவு
x
தினத்தந்தி 11 Feb 2018 3:31 AM IST (Updated: 11 Feb 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரியில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்துள்ளார். பொதுக்கூட்டங்களில் பேசுவதுடன் அவர் கோவில்களுக்கும், மடாதிபதிகளையும் சந்தித்து ராகுல்காந்தி பேச உள்ளார். பல்லாரியை சேர்ந்த ஆனந்த்சிங் மற்றும் நாகேந்திரா எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். சுயேச்சையாக போட்டியிட்டு நாகேந்திரா எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தாலும், அவர் பா.ஜனதாவில் தான் இருந்தார். அவர்கள் 2 பேரும் காங்கிரசில் சேர்ந்திருப்பதால் பல்லாரியில் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.

அவர்கள் காங்கிரசில் இணைந்திருப்பதால் கட்சியில் எந்த விதமான கருத்து வேறுபாடும் எழவில்லை. பல்லாரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை ஆகும். இங்கு தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனந்த்சிங், நாகேந்திரா எம்.எல்.ஏ.க்களை போல பா.ஜனதாவை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளனர். அவர் கட்சியில் இணைவது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. அந்த எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேருவார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story