பாகூர் மூலநாதர் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை அதிகாரிகள் ஆய்வு


பாகூர் மூலநாதர் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2018 5:12 AM IST (Updated: 11 Feb 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் மூலநாதர் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாகூர்,

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கம் சாய் பாபா கோவில் அருகே கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், கிருமாம்பாக்கம் பகுதி மக்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. அதன்பின், காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதையொட்டி அந்த இடத்தில் ஏ.சி., வசதியுடன் கூடிய நவீன திருமண நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இது குறித்து அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிலையில், வருவாய் துறை செயலர் கந்தவேலு, கலெக்டர் சத்தியேந்திர சிங் துர்சாவத், நில அளவை துறை இயக்குனர் முனுசாமி, சப் கலெக்டர் உதயக்குமார், சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று கிருமாம்பாக்கத்தில் சாய் பாபா கோவில் அருகே வழங்கப்பட்ட மனைப்பட்டாவை, வள்ளுவர்மேடு பகுதியில் மாற்றி கொடுப்பது குறித்தும், அந்த இடத்தில் திருமண நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பாகூர் மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான மூன்று குளங்கள் ஆக்கிரமிப்பில், சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருவாய் துறை செயலர் கந்தவேலு, பாகூருக்கு சென்று மூலநாதர் கோவில் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை தூர்வாரி அழகுப்படுத்தி பராமரிப்பது குறித்தும், கழிவுநீர் செல்வதை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Next Story