சமையில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காததால் சாலை மறியல்
பாப்ஸ்கோ ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்காததால் வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை பாப்ஸ்கோ மேலாண் இயக்குனரை மாற்ற வேண்டும், குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் தங்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 8-ந் தேதி முதல் பாப்ஸ்கோ காய்கனி அங்காடி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாரியப்பன், சிவப்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக பாப்ஸ்கோ காய்கறிக்கடை, மதுபானம் விற்பனை கூடங்கள், சமையில் எரிவாயு விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக அங்கு எரிவாயு சிலிண்டர் கேட்டு வருபவர்கள் சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்டோர் சமையல் எரிவாயு சிலிண்டர் கேட்டு வந்தனர். ஆனால் சமையல் எரிவாயு விற்பனை நிலையம் மூடப்பட்டு இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென திண்டிவனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் காலி சிலிண்டர்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரின் காலி சிலிண்டர்களை பறிமுதல் செய்து தங்கள் வாகனங்களில் ஏற்றி கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மீண்டும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story