சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவேதிதை ரத யாத்திரை விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவேதிதை ரத யாத்திரை விழா நடந்தது. சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடராக விளங்கிய நிவேதிதையின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கருப்பூர்,
சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடராக விளங்கிய நிவேதிதையின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலத்தில் நேற்று நிவேதிதையின் ரத யாத்திரை நடைபெற்றது. இந்த ரத யாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அதைத்தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவேதிதை ரத யாத்திரை விழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மத்திய அரசு வக்கீல் நாச்சிமுத்து ராஜா வரவேற்றார்.
சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளர் யதாத்மானந்தா, ஜெயராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜேந்திர பிரசாத், பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் ராமசாமி, பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிவேதிதையின் ரத யாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் சகோதரி நிவேதிதை ரத யாத்திரையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெளிநாட்டை சேர்ந்த நிவேதிதை, சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடராக விளங்கியவர். இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்திடவும், இந்திய மக்கள் மனதில் தேசிய சிந்தனையை விதைத்திட தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சகோதரி நிவேதியை ஆகும். அவரது நினைவை போற்றும் வகையில் தற்போது ரத யாத்திரை விழா கொண்டாடப்படுகிறது, என்றார்.
விழாவில், பெரியார் பல் கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குமாரசாமி கலந்து கொண்டு யாத்திரையின் நோக்கத்தை பற்றி பேசினார். எழுத்தாளர் கவிதாசன், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பல்கலைக் கழக பதிவாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story