புதிதாக கட்டப்படும் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
நங்கவள்ளி அருகே புதிதாக கட்டப்படும் கூட்டு குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மேச்சேரி,
நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். தற்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நங்கவள்ளி-மேச்சேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகிறார்கள்.
அதன்படி நேற்று வழக்கம்போல் வீரக்கல் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலு (வயது 46) என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர், மேலே இருந்து குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பாலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் பாலு பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து அவரது மனைவி முத்துலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story