பெண்களுக்கான வேலைவாய்ப்பு நாட்டுக்கோழி வளர்ப்பு-3
இது நச்சுஉயிரியால் ஏற்படும் ஒருவித தொற்று நோய். தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும்.
கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றி இந்த வாரம் பார்ப்போம்!
இராணிகெட் நோய்
இது நச்சுஉயிரியால் ஏற்படும் ஒருவித தொற்று நோய். தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும். இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான கோழிகள் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழியும். மூச்சுத் திணறல், நடுக்கம், வாதம் போன்றவை தோன்றும். தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்து, கோழிகள் தலையை இரண்டு கால்களுக்கு இடையில் சொருகிக் கொள்ளும். இந்த நோயால் அதிகளவில் கோழிகள் இறந்துவிடும்.
கோழிகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு கிராம் மஞ்சள் தூளை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். 10 கிராம் சீரகம், 5 கிராம் மிளகு, மஞ்சள் தூள், கீழாநெல்லி, வெங்காயம், பூண்டு 5 பல் ஆகியவற்றை கலந்து அரைத்து கலவை தீவனமாக கொடுக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசிகளை அளிக்க வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், வாய் வழியாக அளிக்கப்படும் குருணை வடிவ தடுப்பூசி மருந்தை உருவாக்கி இருக்கிறது. இதை அனைத்து பருவ நாட்டுக் கோழிகளுக்கும் அளிக்கலாம். 3 மாதத்துக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும்.
கோழி அம்மை
எல்லா பருவ கோழிகளையும் தாக்கக்கூடிய நோய் இது. தொண்டை, மூக்கு, தாடை தசை, அலகின் ஓரங்கள், வாய், கால்களில் கொப்பளங்கள் தோன்றி, புண்ணாக மாறி, பின் உலர்ந்து உதிரும்.
10 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள், 50 கிராம் துளசி, வேப்பிலை, 5 கிராம் கற்பூரம், 20 கிராம் சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய்யை சம அளவில் எடுத்து சூடாக்கி, அதில் அரைப்பை கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும். இதற்கென தடுப்பூசிகளும் உள்ளன.
கோழி காலரா
நுண்ணுயிரி நோயான இது, பேஸ்சுரேல்லா மல்டோசிடா என்னும் நுண்மத்தால் உண்டாகிறது. இந்த நோய் தாக்கினால் கோழிகள் இறை எடுக்காது. காய்ச்சல் ஏற்படும். தாடை வீக்கமடைந்து இருக்கும். பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளை கொடுக்க வேண்டும். கோலி செப்டிசீமீயா என்ற நோய் கோழிக்குஞ்சுகளை அதிகம் தாக்கும். தீவனம், காற்று, குடிநீர் மூலம் இந்த நோய் பரவும்.
ஒட்டுண்ணி நோய்கள்
நாட்டுக்கோழிகளுக்கு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். திறந்த வெளியில் நாட்டுக் கோழிகளை வளர்ப்பது, ஓட்டுண்ணிகளின் தாக்கத்துக்கு சாதகமாகிறது. எறும்பு, வண்டு, ஈ, மண்புழு போன்றவைகளை திறந்த வெளியில் கோழிகள் அதிகம் உட்கொள்வதால் ஒட்டுண்ணிகளின் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் பாதித்த கோழிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குடற்புழு நீக்கம், உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.
பூஞ்சான் நோய்
இந்த நோய் ஆஸ்பர்ஜில்லஸ் வகை பூஞ்சை காளானால், ஈரப்பதம் அதிகம் உள்ள நிலக்கடலை, சோளம் போன்ற தீவனப் பொருட்களில் உண்டாகும் நச்சுப் பொருட்களால் ஏற்படுகிறது. பாதிப்புக்குள்ளான கோழிகளின் வளர்ச்சி தடைபட்டு இறந்துவிடும். மக்கிய மற்றும் பூஞ்சான் படர்ந்த கடலைப் புண்ணாக்கு, மக்காச்சோளம் ஆகியவற்றை வழங்காமல் இருந்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
நோய் பாதித்த கோழிகளுக்கு கண் மற்றும் மூக்கு வழியாகவும் தடுப்பூசியை அளிக்கலாம். சொட்டு மருந்தை கண் அல்லது மூக்கு தூவாரம் வழியாக அளிக்க வேண்டும். தொடைப்பகுதியில் தடுப்பூசியை போடலாம். குடிநீரிலும் கோழிகளுக்கு தடுப்பு மருந்துகளை கலந்து கொடுக்கலாம்.
தடுப்பூசி அட்டவணை
தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பான முறையில் குளிர்ந்த நிலையில் பண்ணைக்கு எடுத்து செல்ல வேண்டும். மருந்துகளை அதற்கு உண்டான திரவத்தில் சரியான அளவில் கலப்பதற்கும், குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவதற்கும் தகுந்த பயிற்சி பெற்று இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் மேற்பார்வையும், ஆலோசனையும் அவசியம். காலாவதியான மருந்துகளை பயன் படுத்த கூடாது. மேலும் கோழிகளுக்கு நோய் வரும் முன்னே காக்கும் வகையில், பண்ணையில் உள்ள அனைத்து கோழி களுக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடுவது அவசியம். தடுப்பூசி போட வேண்டிய கோழிகள் ஏதாவது நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால் தடுப்பூசிகளை போடக்கூடாது.
விற்பனை வாய்ப்பு
விற்பனை என்பது முக்கியமானது. நுகர்வோர்களின் தேவை, விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனையை செயல் படுத்திட வேண்டும். பண்ணையாளர்கள் முகவர்கள் மூலமாக மொத்த வியாபாரியிடமும், சில்லரை வியாபாரிகளிடமும் விற்பனை செய்யலாம். முகவர்கள் இல்லாமல் மொத்த வியாபாரிகள் அல்லது நுகர்வோரிடம் நேரடியாகவும் விற்பனை செய்திடவும் முடியும். பண்ணை வைத்திருப்பவர்கள் அடை முட்டை, நாட்டுக்கோழி குஞ்சு, இறைச்சிக்கான நாட்டுக்கோழி, முட்டை ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
குஞ்சு விற்பனை
அறிவியல் தொழில்நுட்ப முறைப்படி நாட்டுக்கோழிகளை வளர்க்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையமும், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியின் கோழி அறிவியல் துறையும் பண்ணை வைப்பவர்களுக்கென்று நாட்டுக்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றது. சில தனியார் நிறுவனங்களும் குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது முதல் நாள் கோழி குஞ்சின் விலை ரூ.30 என்று நிர்ணயிக்கப்படுகிறது.
இறைச்சிக்காக விற்பனை
வணிக நோக்கில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் 90 முதல் 100-வது நாட்களில் விற்கப்படுகின்றன. அப்போது ஒரு கோழி சராசரியாக 1 முதல் 1.2 கிலோ எடை இருக்கும். 120 நாட்கள் சேவலின் எடை 2 கிலோ இருக்கும். சில்லறை விற்பனையில் உயிருள்ள நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சியானது ஒரு கிலோ ரூ.200-க்கும் விற்பனையாகிறது.
இதைபோல் நாட்டுக்கோழி முட்டை ஒன்று ரூ.8 முதல் 10 வரைக்கும் விற்கப்படுகிறது. இனவிருத்திக்கு பயன்படும் பெட்டை கோழிகள் ரூ.300-க்கும், சேவல் ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி இறைச்சி உண்பதற்கு சுவையானது. புரதம் நிறைந்தது. கொழுப்பு குறைந்தது.
நாட்டுக்கோழியின் முட்டை, இறைச்சி மூலம் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யலாம். அதாவது முட்டை ஊறுகாய், முட்டை வடை, முட்டை காய்கறி கட்லெட், இறைச்சி சூப், கோழி மசாலா, தந்தூரி, கோழி குருமா போன்றவை களாகவும் தயார் செய்து விற்கலாம். கோழிப் பண்ணைத் தொழிலில், கோழிகளின் எருவை விற்பதன் மூலமும் வருமானம் கிடைக்கும்.
லாபம் அதிகம்
லாபகரமாக பண்ணை நடத்திட முறையான கணக்கு அவசியம். நாட்டுக்கோழி வளர்ப்போர் பதிவேடு பராமரிக்க வேண்டும். தினமும், வரவு செலவு, இதர மருத்துவ அறிவுரை உள்ளிட்ட அனைத்து பராமரிப்பு விஷயங்களையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை லாப, நஷ்ட கணக்குகளை பார்ப்பது அவசியமான ஒன்றாகும்.
புறக்கடை முறையில் ஒரு பெட்டை கோழி ஆண்டுக்கு சுமார் 80 முட்டை இடுகிறது என்று எடுத்துக்கொண்டால் 10 கோழிகள் மூலம் மொத்தம் 800 முட்டைகள் கிடைக்கும். இதில் குஞ்சு பொரிக்க தகுதியான 700 முட்டைகள் கிடைத்துவிடும். இவைகளில் 100 அடை முட்டைக்கு 75 குஞ்சுகள் வீதம் மொத்தம் 525 குஞ்சுகள் கிடைக்கும். இவைகளில் விற்பனை வயதை எட்டும் வரைக்கும் வளர்ந்த கோழிகளாக 300 கிடைக்கும். பொரித்த குஞ்சுகளை சரியாக 6 அல்லது 7-வது மாதத்தில் ஒன்றரை கிலோ எடை வந்தவுடன் விற்பனை செய்து விடலாம். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். இதில் தீவனம், குஞ்சுகளை பராமரித்தல், கூண்டு அமைத்தல் என ரூ.25 ஆயிரம் வரை செலவு ஆகும். வருமானம் ரூ.48 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும். நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழிலுக்கு தற்போது தமிழகத்தில் மவுசு அதிகரித்து வருகிறது. கோழி வளர்ப்புகளுக்கு காப்பீட்டுத்திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
(அடுத்த வாரம் ஆடு வளர்ப்பு முறை)
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Related Tags :
Next Story