நடிகர்கள் வேடமிட்டு ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திருப்பரங்குன்றத்தில் நடன கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., ரஜினி போல வேடமிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தலைமை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கடந்த 2 வாரங்கள் முன்பு முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதில் மாறுபட்ட கோணத்தில் மன்ற நிர்வாகிகள் சிலர் தமுக்கை கழுத்தில் தொங்கவிட்டபடி வீதிவீதியாக சென்று தண்டோர போட்டு மன்றத்தில் உறுப்பினராக சேருங்கள் என்று குரல் எழுப்பினர். இந்தநிலையில் நேற்று 2-ம் கட்டமாக திருப்பரங்குன்றம் படப்படித்தெருவில் செயலளார் கோல்டன் சரவணன் தீவிர உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இதில் எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் போல, நடன கலைஞர்கள் சிலர் வேடமிட்டு வீடு வீடாக சென்று மக்களிடம் மன்றத்தின் உறுப்பினர் படிவம் வழங்கினர். இந்த நூதன மான தீவிர உறுப்பினர் சேர்க்கை மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர். வேடமிட்ட நடன கலைஞர் எம்.ஜி.ஆர். முருகன், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை ரஜினியால் தர முடியும், ஆகவே ரஜினி மக்கள் மன்றத்தில் தீவிர உறுப்பினராக சேருங்கள் என்று எம்.ஜி.ஆர். கூறுவது போல பேசினார். ரஜினிகாந்த் வேடமிட்ட நடன கலைஞர் ரஜினி கண்ணன், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை மக்கள் படும் துயரத்தை தவிர்த்திட உண்மையான நேர்மையான வெளிப்படையான ஆட்சி கொண்டு வரப்படும்.
அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வேண்டும். முதலில் தீவிர உறுப்பினராக சேருங்கள் என்று ரஜினி கூறுவது போன்று பேசினார். இதில் திருநங்கைகளையும் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story