கீழவளவில் மாதக்கணக்கில் மூடியே கிடக்கும் நூலகம் வாசகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்
மேலூர் அருகே உள்ள கீழவளவில் உள்ள நூலகம் மாதக்கணக்கில் மூடியே கிடக்கிறது. இதனால் வாசகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலூர்,
உலக வரைபடத்திலுள்ள நாடுகளுக்கு போக விருப்பமா? அப்படியானல் ஒரு நூலகத்துக்குச் செல்லுங்கள் என்று அறிஞர் டெஸ்கார்டஸ் கூறியுள்ளார். நூலகம் அறிவு, ஒழுக்கம், நற்பண்பு போன்றவற்றை வளர்ப்பதில் பள்ளிக்கூடத்திற்கு அடுத்தபடியாக நூலகம் விளங்குகிறது. அதனால் உலகெங்கும் நூலகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்தநிலையில் வாசகர்கள் அதிக அளவில் இருந்தும் மேலூர் அருகே உள்ள கீழவளவில் உள்ள நூலகம் மூடியே கிடக்கிறது. அங்கு நூலகர் பணியமர்த்தப்படாததால், புத்தகங்கள் வாசிப்பு இல்லாமல் அறைக்குள் பூட்டியே கிடக்கின்றன. மேலும் நூலகத்தை திறப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கீழவளவு கிளை நூலகத்தில் பணியில் இருந்த நூலகர் மரணமடைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து நூலகர் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நூலகம் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் புத்தகம் படிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நூலகம் திறக்கப்படாமல் இருப்பதால் முன்பகுதியில் சிலர் தூங்கி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நூலகத்திற்கு புதிய நூலகரை நியமிக்கப்பட்டு, நூலகம் திறக்கப்பட வேண்டும். இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், போட்டி தேர்வு உள்ளிட்ட பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story