குரூப்-4 தேர்வை 26 ஆயிரத்து 183 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 26 ஆயிரத்து 183 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 26 ஆயிரத்து 183 பேர் எழுதினர்.

கரூர்,

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில் 30 ஆயிரத்து 433 பேருக்கு அழைப்பு கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் 96 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தன. தேர்வர்கள் காலை முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.

தேர்வு அறைக்கு முன்னதாக தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இத்தேர்வை மாவட்டம் முழுவதும் மொத்தம் 26 ஆயிரத்து 183 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 250 பேர் தேர்வு எழுதவரவில்லை. 86 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வை எழுதினர்.

கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, புலியூர் கவுண்டம்பாளையம் எம்.ஏ.எம். மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த தேர்வினை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வு பணியில் 96 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 96 ஆய்வு அலுவலர்கள், 1,540 அறை கண்காணிப்பாளர்கள், 19 மண்டல அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க 15 பறக்கும் படை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. மதியம் 1 மணி 5 நிமிடத்தில் முடிவடைந்தது. இந்த முறை கூடுதலாக 5 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பதில் அளிக்காத வினாக்களை குறிப்பிட்டு எழுதினர். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பார்வையற்றவர்கள் உதவியாளர் மூலம் தேர்வு எழுதினர்.

தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக கலெக்டர் ஆய்வின் போது உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி (கரூர்), விமல்ராஜ் (குளித்தலை) மற்றும் தாசில்தார்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story