கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:00 AM IST (Updated: 12 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் 13 மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி, பாப்ஸ்கோ ஊழியர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

பாப்ஸ்கோவில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு 10 மாத சம்பளமும், தினக்கூலி ஊழியர்களுக்கு 13 மாத சம்பளமும் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். தற்போதுள்ள பாப்ஸ்கோ மேலாண் இயக்குனரை மாற்றிவிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியை மேலாண் இயக்குனராக நியமிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. போராட்டத்திற்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக காரைப்பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

6-ம் நாள் போராட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்திருப்பதாக சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். 

Next Story