மாலைகள் கட்ட உறுதியாக உள்ளதால் கும்பகோணம் பகுதி வாழைநார்களுக்கு மவுசு அதிகரிப்பு
மாலைகள் கட்ட உறுதியாக உள்ளதால் கும்பகோணம் பகுதி வாழை நார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அந்த வாழை நார்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கும்பகோணம், பாபநாசம், கோவிந்தக்குடி, திருவையாறு, சுவாமிமலை, பட்டீஸ்வரம் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றின் படுகை மற்றும் கிளை ஆறுகளின் படுகைகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இலை, பழம் என இரு முக்கிய தேவைக்காக வாழை அதிக அளவு பயிரிடப்பட்டாலும் வாழையில் இருந்து கிடைக்கும் நார் மாலைகள் கட்ட அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் வாழைத்தார் வெட்டும் பணியை முடித்த உடன் வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் நாருக்காக வாழை மரங்களை மொத்தமாக குத்தகைக்கு விடுகின்றனர். பின்னர் இந்த மரத்தில் இருந்து தொழிலாளர்கள் நாரை பிரித்து எடுத்து கட்டுகளாக கட்டி அதை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தற்போது வாழைத்தார் அறுவடை முடிந்துள்ளது. இதனால் வாழை மரங்களில் இருந்து நாரை பிரித்து எடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து வாழை நார் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பாபநாசத்தை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-
குத்தகை
கும்பகோணம் பகுதியில் பயிரிடப்படும் வாழை மரங்களில் இருந்து அதிக அளவு நார் கிடைக்கும். வாழை இலை அறுவடை, வாழைத்தார் வெட்டும் பணி முடிந்ததும் அந்த வயலை நாங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொள்வோம். இதற்காக வாழை தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். பின்னர், ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி, அதில் இருந்து நாரை உரித்து அதே இடத்தில் காய வைப்போம். 2 அல்லது 3 நாட்கள் காய்ந்த பின்னர் வாழை நாரை கட்டுகளாகக் கட்டி சென்னை, பெங்களூரு, குஜராத் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம். ஒரு கட்டில் 500 வாழை நார்கள் இருக்கும்.
உறுதி தன்மை
மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் போன்ற சிறிய வகை பூக்களை கட்டுவதற்கு சிறிதாகவும், சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலை, ஆள் உயர மாலை போன்றவற்றை கட்டுவதற்கு பெரிதாகவும் தேவைப்படும் வகையில் நார்களை பிரித்து எடுப்போம். வாழை நார்களை காய வைக்க நல்ல வெயில் தேவை. மழை பெய்தால் நார்களை காய வைப்பதில் சிரமம் ஏற்படும். எனவே காலநிலை மாற்றத்தை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழை நார்களை பிரித்து எடுத்து காய வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார காவிரி படுகையில் நல்ல மண் வளம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள வாழை மரங்களில் இருந்து கிடைக்கும் நார்கள் அதிக உறுதி தன்மையுடன் மாலைகள் கட்ட வசதியாக உள்ளது. இதனால் கும்பகோணம் பகுதி வாழை நார் என்றால் இதற்கு தனி பெருமை உள்ளது. தமிழகத்தில் ஒரு கட்டு வாழை நார் ரூ.700-க்கும் மும்பை, பெங்களூரு, குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் ரூ.1,000-க்கும் விலை போகிறது.
ஏற்றுமதி
இந்த வாழை நார் உரிக்கும் தொழிலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கூலி அளிக்கப்படுகிறது. வருடத்தில் தை மாத இறுதியில் மட்டும் எங்களுக்கு இந்த தொழில் இருக்கும். வாழை நார்கள் லாரி மூலம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் இருந்து கிடைக்கும் வாழைநார்களுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால் கும்பகோணம் பகுதியில் வாழைநார்களை பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story