கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி விழா நாளை தொடங்குகிறது


கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி விழா நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி விழா நாளை தொடங்குகிறது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 17-வது ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் இரவு 7.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகின்றன.

நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குனர் காமகோடி, ஆடிட்டர் வெங்கடசுப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

500 கலைஞர்கள் பங்கேற்பு

இந்த நாட்டியாஞ்சலி விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆட உள்ளனர். பரதம், மோகினியாட்டம், கதக் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புகழ்பெற்ற நாட்டிய கலைஞர்களான ருக்மணி விஜயகுமார், லாவண்யாசங்கர் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்திய நாட்டிய கலைஞர்கள் பலர் பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி விழா குழுவினர் செய்துவருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது செயலாளர் ராஜகோபாலன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், இணை செயலாளர் சுரேஷ், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், சங்கர், பாலச்சந்திரன், லலிதாசேதுராமன், சாதிக்அலி மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story