ஏரியில் கழிவுகள் கொட்ட முயன்ற வாகனத்தை இளைஞர்கள் சிறைபிடிப்பு
காரிமங்கலத்தில் ஏரியில் கழிவுகள் கொட்ட முயன்ற வாகனத்தை இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 7 ஏரிகளும், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 135 ஏரிகளும் என மொத்தம் 142 ஏரிகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பெய்த மழையால் ஒன்றியத்தில் உள்ள ஒருசில ஏரிகள் நிரம்பியது. இதில் காரிமங்கலத்தில் உள்ள குட்டூர் ஏரி, பெரிய ஏரி, மோட்டுப்பட்டி ஏரி, வண்ணான் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், கோழி, ஆடுகளின் இறைச்சி கழிவுகள், பேக்கரி கடைகள் என பல்வேறு நிறுவனங்களில் இருந்து குப்பை கழிவுகளை சேகரித்து சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுவதுடன் நீரில் தன்மை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் நேற்று காரிமங்கலத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் பேக்கரியில் இருந்து முட்டை ஓடுகள், ரொட்டி கழிவுகளை ஒரு வாகனத்தில் ஏற்றி வந்து கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டுப்பட்டி ஏரியில் கொட்ட முயன்றனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏரியில் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் காரிமங்கலம் போலீசார் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரிமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜ் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞர்கள் மற்றும் பேக்கரி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டக்கூடாது என்று பேக்கரி ஊழியர்களை அரசு அலுவலர்கள் எச்சரித்து வாகனத்தை விடுவித்தனர்.

Related Tags :
Next Story