சேத்துப்பட்டு அருகே 45 யூனிட் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
சேத்துப்பட்டு அருகே 45 யூனிட் மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு அருகே பெரிய கொழப்பலூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்து அதே பகுதியில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மணல் கொள்ளையர்கள் குவியல் குவியலாக பதுக்கி வைத்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தம், சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், மண்டல தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு மணல் குவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
குவித்து வைத்திருந்த மணல் 45 யூனிட் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். இதையடுத்து வருவாய்த்துறையினர் மணலை பறிமுதல் செய்து பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து பெரிய கொழப்பலூர் பகுதியில் உள்ள ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதால் அதனை தடுக்க வருவாய்த்துறையினர் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் அங்கு பள்ளம் தோண்டி உள்ளனர்.

Related Tags :
Next Story