சேலத்தில் முன்னாள் எம்.பி. கந்தசாமி மரணம் ஜி.கே.வாசன் நேரில் அஞ்சலி
சேலத்தில் முன்னாள் எம்.பி.கந்தசாமி திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சேலம்,
சேலம் மரவனேரி 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கே.கந்தசாமி (வயது 68). முன்னாள் எம்.பி.யான இவர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் படுத்திருந்த கே.கந்தசாமியை அவரது குடும்பத்தினர் தட்டி எழுப்பினர். ஆனால் அவர் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் டாக்டருக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்தனர். அப்போது, அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். மாரடைப்பால் கே.கந்தசாமி திடீரென மரணம் அடைந்த தகவலை அறிந்த சேலம் மாவட்ட த.மா.கா நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் பலர் அவரது வீட்டிற்கு திரண்டு வந்து கந்தசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, கந்தசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சேலம் வந்தார். பின்னர், மரவனேரிக்கு சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கந்தசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், மாணவர் பருவத்திலேயே கந்தசாமி, காங்கிரஸ் கட்சியில் இணைத்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அனைத்து கட்சியினரிடமும் நெருங்கி பழகக்கூடியவர். அவரது இழப்பு த.மா.காவிற்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார். இதையடுத்து கந்தசாமியின் உடல் அவரது சொந்த ஊரான ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இறந்த கந்தசாமி, 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தலைவாசல் தொகுதியிலும், 2006-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, இவர், கட்சியின் மாணவர் அணி தலைவராகவும், அதன்பிறகு காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

Related Tags :
Next Story