தனியார் நிறுவன ஊழியர் கடத்தல் நைஜீரியா நாட்டு வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியர் கடத்தல் நைஜீரியா நாட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2018 5:08 AM IST (Updated: 12 Feb 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே அய்யப்பாநகரில் வசித்து வருபவர் சைலேந்திரகுமார்(வயது19). இவர், கே.ஆர்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார்.

பெங்களூரு,

நைஜீரியா நாட்டை சேர்ந்த சாமுவேல் டாகிம்(33), சிடிஜ் ஆகிய 2 பேரும்  இவரது நிறுவனத்திற்கு அருகே  வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேருடன் சைலேந்திரகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிடிஜிக்கு பணம் தேவைப்பட்டது. உடனே அவர் தனது நண்பர்களிடம் பணம் கேட்டார். அவர்களும் பணம் கொடுக்க சம்மதித்தனர். பின்னர் சைலேந்திரகுமாரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி சிடிஜ் தனது நண்பர்களிடம் கூறினார்.

அதன்படி, அவர்களும் சைலேந்திரகுமாரின் வங்கி கணக்குக்கு ரூ.49 ஆயிரத்தை அனுப்பினார்கள். அந்த பணத்தை சிடிஜிடம் கொடுக்க சைலேந்திரகுமார் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிடிஜ், சாமுவேல் டாகிம் உள்பட 3 பேர் சேர்ந்து சைலேந்திரகுமாரை கடத்தி சென்று, அவரை அடித்து உதைத்து தாக்கினார்கள். மேலும் ரூ.40 ஆயிரத்தையும் வாங்கிவிட்டு, அவரை விடுவித்தனர். இதுபற்றி கே.ஆர்.புரம் போலீசில் சைலேந்திரகுமார் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் டாகிமை கைது செய்தார்கள். தலைமறைவாக உள்ள சிடிஜ் மற்றும் இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story