பெங்களூருவில் நடந்த விபத்துகளில் செல்போன் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் சாவு
பெங்களூருவில் நடந்த விபத்துகளில் செல்போன் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு நாராயணபுரா அருகே வசித்து வந்தவர் யோகானந்த் (வயது 31). இவர், செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நாராயணபுரா பகுதியில் புதிதாக மற்றொரு செல்போன்கள் விற்கும் கடையை யோகானந்த் அமைத்துள்ளார். அந்த கடையின் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற இருந்தது. திறப்பு விழாவுக்கு தேவையான பூக்களை வாங்க நாராயணபுராவில் இருந்து சிட்டி மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் யோகானந்த் புறப்பட்டு சென்றார். அவருடன், நண்பர் நவீனும் சென்றிருந்தார்.
காலை 6 மணியளவில் நாகவாரா மெயின் ரோட்டில் வரும்போது, அதே சாலையில் வந்த ஒரு லாரி யோகானந்தின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் யோகானந்த், அவரது நண்பர் நவீன் சாலையில் விழுந்தனர். அப்போது அதே லாரியின் சக்கரம் யோகானந்த் உடலில் ஏறி இறங்கியது. இதில், அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த நவீன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுபோல, உளிமாவு அருகே நைஸ் ரோட்டில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த பரத்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் டிரைவர் லோகேஷ் பலத்த காயத்துடன் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று, கலாசிபாளையா அருகே வசித்தவர் சாகர்(27). இவர், நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து மலவள்ளிக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். பெங்களூரு அருகே கனகபுரா மெயின் ரோட்டில் வரும்போது அவரது ஸ்கூட்டர் மீது ஒரு லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாகர் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டார். இந்த விபத்துகள் பற்றி கே.ஜி.ஹள்ளி, உளிமாவு மற்றும் கனகபுரா போக்குவரத்து போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story