திருமால்பூர்-அரக்கோணம் ரெயில்வே மின்மயமாக்கல் பணி 6 மாதத்தில் முடிவடையும்


திருமால்பூர்-அரக்கோணம் ரெயில்வே மின்மயமாக்கல் பணி 6 மாதத்தில் முடிவடையும்
x

திருமால்பூர்- அரக்கோணம் ரெயில்வே மின்மயமாக்கல் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்று தெற்கு ரெயில்வே சென்னை மண்டல மேலாளர் குல்ஷேத்ரா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே சென்னை மண்டல பொது மேலாளர் குல்ஷேத்ரா ஆய்வு மேற்கொண்டார். ரெயில் நிலையத்தில் 43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி தகடுகள், லிப்ட் வசதியுடன் கூடிய பயணிகள் அறை மற்றும் பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரெயில் நிலையத்தை சிறப்பாக பராமரித்த ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது ரெயில் பயணிகள் சார்பில் காஞ்சீபுரத்திற்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படவேண்டும், காஞ்சீபுரம்-திண்டிவனத்திற்கு வந்தவாசி வழியாக புதிய ரெயில் தடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமால்பூர்-அரக்கோணம் ரெயில்வே மின்மயமாக்கல் பணி 6 மாதத்தில் முடிவடையும். பின்னர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், சென்னை இணைக்கும் சுற்றுவட்ட ரெயில் சேவை பணி தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story