முருகன் கோவில் நிலம் 150 ஏக்கர் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தவர் தகவல்


முருகன் கோவில் நிலம் 150 ஏக்கர் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தவர் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணைமலை முருகன் கோவில் நிலம் 150 ஏக்கர் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தவர் தகவல்

கரூர்,

கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலுக்குரிய 497 ஏக்கர் நிலங்களில் பல இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டும், விவசாய நிலமாகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக திருத்தொண்டர்சபையின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையிலான குழுவினர் வெண்ணைமலை முருகன் கோவிலுக்குரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு பகுதியை அளவிடும் பணி நடந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியை வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் சபையின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “வெண்ணைமலை முருகன் கோவிலுக்குரிய நிலங்களில் 150 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு ஆவணப்படி அளவீடு பணி நடந்துள்ளது. கோவில் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது. அவ்வாறு வாங்கி கட்டிடம் கட்டிய ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு வாடகை தாரர்களாக மாறிகொள்ள வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 5½ லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 1½ லட்சம் ஏக்கரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். முன்னதாக ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட்ட போது கோவில் செயல் அலுவலர் ராஜாராம், மண்மங்கலம் தாசில்தார் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story