உயிர்பலியை தடுக்க விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை வரை ‘சர்வீஸ் ரோடு’ போட வேண்டும், கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
உயிர்பலியை தடுக்க விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை வரை ‘சர்வீஸ்ரோடு’ போட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
பெருந்துறை அருகே உள்ள மூங்கில்பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பெருந்துறை கிருஷ்ணாபுரத்தில் இருந்து விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை ரோடு இருந்தது. சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது இந்த ரோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலையை குறுக்காக கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிர் இழந்து உள்ளனர். எனவே விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு வரை ‘சர்வீஸ்ரோடு’ போட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு வளையக்கார வீதி பகுதியை சேர்ந்த 20 பெண்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களுடைய மகள்கள் திருமணத்தை கடன் வாங்கி தான் முடித்து வைத்தோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.
இதுவரை திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை. நாங்கள் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வருவதால் உடனடியாக திருமண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘சிக்கரசம்பாளையம் பாரதிநகரில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அங்கன்வாடி மையம் இல்லாதால் எங்களுடைய குழந்தைகளை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணபதிநகர் பகுதிக்கு அழைத்துச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே சிக்கரசம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
பவானி பகுதியை சேர்ந்த வியாபாரி சக்திவேல் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியும், பஸ்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கப்படுகிறது. எனவே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதேபோல் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாபு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி புகழேந்தி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Related Tags :
Next Story