திருத்தணியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது


திருத்தணியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2018 3:30 AM IST (Updated: 13 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருத்தணி,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஏசு (வயது 32). நேற்று முன்தினம் திருத்தணியில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.

பின்னர் அன்றைய தினம் இரவு அவர் உறவினர் வீட்டின் எதிரே உள்ள திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆஸ்பத்திரி வளாக திண்ணையில் படுத்துக்கொண்டார். திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் (55) பணியில் இருந்தார்.

கைது

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அந்த வாலிபரை எழுப்பி அங்கே படுக்க கூடாது. வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏசு, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜை தகாதவார்த்தைகளால் பேசி அவரை தாக்கினார். இதைதொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் ஏசுவை பிடித்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ஏசுவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

Next Story