ஊட்டி நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டி நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2018 3:00 AM IST (Updated: 13 Feb 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஊட்டி நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி

ஊட்டி நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஊட்டி நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

சுற்றுலா நகரமான ஊட்டி சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. ஊட்டிக்கு அடுத்த மாதம் (மார்ச்) முதல் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருவார்கள். அவர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். ஊட்டியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்ற வேண்டும். எரியாத தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை. எனவே வளர்ச்சி பணிகளை நகராட்சி மேற் கொள்ளாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் இளங்கோ, முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story