பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பிச்சை எடுத்து நெடுஞ்சாலை துறைக்கு பணம் அனுப்பும் போராட்டம்
திருவாரூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிச்சை எடுத்து நெடுஞ்சாலை துறைக்கு பணம் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் அடியக்கமங்கலம் அருகில் அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த மருமகன், மாமனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனவே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று திருவாரூர் அடியக்கமங்கலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பிச்சை எடுத்து நெடுஞ்சாலை துறைக்கு பணம் அனுப்பும் நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் லத்தீப் தலைமை தாங்கினார். இதில் தொகுதி தலைவர் அகமது மைதீன், மாவட்ட செயலாளர் விலையாத்் உசேன், கிளை தலைவர் சாகுல் அமீது. கிளை செயலாளர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருவாரூர்-நாகை சாலையில் சென்ற பஸ் பயணிகள் மற்றும் வாகனத்தில் சென்றவர்களிடம் பிச்சை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் லத்தீப் கூறுகையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அந்த பணத்தை நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பும் போராட்டதில் ஈடுபட்டு உள்ளோம். சாலை சீரமைக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.

Related Tags :
Next Story