“ஜெயலலிதா படம் திறப்பை அரசியலாக்குவது உள்நோக்கம் கொண்டது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
“சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை அரசியலாக்குவது உள்நோக்கம் கொண்டது” என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
காவி நிறத்தை கமல்ஹாசன் அணிகிறாரா? ரஜினி அணிகிறாரா? என்பது இப்போது பிரச்சினை அல்ல. காவி என்பது ஒரு நிறம். அது இந்துக்கள் மத்தியில் பெருமையாகவும், தியாகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. காவியை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். யாராக இருந்தாலும் தான் வாழ வேண்டும் என்று எண்ணாமல், பிறர் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.
தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. அரசை பா.ஜனதா இயக்குவதாக கூறுவது தவறு. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அவரை அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.
சட்டசபையில் ஜெயலலிதாவின் பட திறப்பை அரசியல் நோக்கத்துடன் பலர் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவை முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில் பார்க்க வேண்டும். அவருடைய புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு விருந்தினர் மாளிகைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. அதற்காக யாரும் வழக்கு தொடரவில்லை.
இப்போது சட்டசபையில் அவரது படம் திறக்கப்பட்டதை அரசியலாக்குவது உள்நோக்கம் கொண்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் சாமி கும்பிடுவதுபோல் ஜெயலலிதாவின் சமாதிக்கு அடிக்கடி செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தாலே ஜெயலலிதாவின் மாண்பு நிலைத்து நிற்கும். சர்ச்சைகளும் குறையும்.
தமிழகத்தில் தமிழ் வாழ வேண்டும். நான் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்தில் சதி வேலை இருக்க வாய்ப்புள்ளது. எனவே அரசு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும்.
இனயம் துறைமுகம் திட்டம் கைவிடப்படவில்லை. இடம்தான் மாற்றப்பட்டுள்ளது. எனவே கைவிடப்பட்டுள்ளது என தவறான தகவலை பரப்ப வேண்டாம். துறைமுக திட்டத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.
விவசாயத்துக்கு மோடி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால் ராகுல்காந்தி விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி கல்குவாரி அமைத்து கேரளாவுக்கு எம்.சான்ட் கடத்துவது தொடர்பாக கலெக்டர்தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 15 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான கிராஸ்லின் என்ற மீனவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவரை இந்திய தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் மீனவர் கிராஸ்லின் சென்னை வந்தார். அவர் தனது மனைவியுடன் நேற்று நாகர்கோவிலுக்கு வந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை மீட்டு தமிழகம் அழைத்துவர மேற்கொண்ட நடவடிக்கைக்காக நன்றி தெரிவித்தார். அப்போது சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி உடன் இருந்தார்.
அவர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள மேலும் 14 மீனவர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்துவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

Related Tags :
Next Story