வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ‘ஸ்மார்ட் நகரம்’ அமைக்க கோரி வியாபாரிகள் மனு
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஸ்மார்ட் நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது மனிதநேய வர்த்தகர்கள் நல சங்கத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள், சங்கத்தின் மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம், கல்லூரி சாலை, என்.எஸ்.பி. சாலை, தெப்பக்குளம், பெரிய கடைவீதி, சிங்கார தோப்பு போன்ற பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயத்த ஆடைகள், செருப்புகள், பேன்சி பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மக்கள் பயன்பாட்டிற்கான சிறு சிறு வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் தரைக்கடைகளை அமைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த தொழில் தான் எங்களது வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தனி சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் நகர திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் திருச்சி மலைக்கோட்டையை மைய புள்ளியாக வைத்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தரைக்கடைகளை அப்புறப்படுத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. இப்படி ஒரு நட வடிக்கை எடுக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஸ்மார்ட் நகரத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பாலக்கரை கீழப்புதூர் இரண்டாவது தெருவை சேர்ந்த அனி என்பவர், தனது மகன் ஹேமந்த் குமார் கொலையில் தொடர்புடைய ஒரு வக்கீலை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த புயல் புருசோத்தமன், பாய்லர் ஆலை மருத்துவமனையில் தனது தந்தை உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத டாக்டர், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும், என்று கோரி மனு கொடுத்தார். மேலும் முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு உதவிகள் கேட்டு பலர் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story