உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் வேளாண் நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்தும், மின்கம்பி வழித்தடங்களில் உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் ஈசன், மாவட்ட தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் அன்பழகன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், விவசாய நிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்தும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதையும் மின் வளையத்தால் இணைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் தனியார் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக விவசாய நிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம், தாரமங்கலம், மேச்சேரி, மல்லியகுந்தம் உள்ளிட்ட பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தால் நிலத்தை இழந்து பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்த வேண்டும். இத்திட்டத்தை பூமிக்கு அடியில் கேபிள் மூலம் நிறைவேற்றுவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வு காணும் வரை இது தொடர்பான பணிகளை அனைத்து இடங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story