கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் வந்தனர். நகைகளை விற்றும், கடன் வாங்கியும் சாகுபடி செய்தது வீணாகி விட்டது என கூறிய அவர்கள் இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்தனர்.
தஞ்சையை அடுத்த சக்கரசாமந்தத்தை சேர்ந்த விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் வந்தனர். பின்னர் கலெக்டர் மனு அளித்து விட்டு வந்த விவசாயிகள் கூறியதாவது:-
கள்ளப்பெரம்பூர் ஏரியில் இருந்து பிரியும் ராஜா வாய்க்காலின் கடைமடைபகுதி சக்கரசாமந்தம். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகிய நிலையில் உள்ளது. நாங்கள் தங்க நகைகளை விற்றும், அடகு வைத்தும், வங்கிகளில் கடன் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும் சாகுபடி செய்தோம்.
தற்போது பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி நாங்கள் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அனுப்பி ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், “தஞ்சை 13-வது வார்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் பஸ் வசதி இல்லை. எனவே பஸ்வசதி செய்து தர வேண்டும். பாதாள சாக்கடைகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் மோசமாக உள்ள சுடுகாட்டை சீரமைக்க வேண்டும். சமுத்திரம் ஏரியில் இருந்து வரும் வடிகாலான வெட்டு வாய்க்காலின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து வரும் நீரும், கழிவுநீருடன் தேங்கி நிற்பதனாலும் இங்கு வசிக்கும் மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் நிற்க தூர்வார வேண்டும்”என கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story