மகா சிவராத்திரியையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


மகா சிவராத்திரியையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:15 AM IST (Updated: 13 Feb 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் மெய்நின்ற நாதர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே மிகப்பெரிய அளவில் சிவன் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினசரி சிவபக்தர்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் உள்பட பக்தர்கள் வந்து சிவன் சிலையை வலம் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் பக்தர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அதே போல கீரமங்கலத்தில் உள்ள பிரமாண்ட சிவன் சிலை கொண்ட மெய்நின்றநாதர் கோவிலிலும் சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு முன்னேற்பாடு பணிகள் தீரமாக நடந்து வருகிறது. அன்னதானம் வழங்கவும், பொங்கல், போன்ற பிரசாதங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story