நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பிச்சையா என்ற சவரிமுத்து (வயது 50). இவர் சவரதொழில் செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு காலி செய்து விட்டு வெளியூர் சென்றுவிட்டார். ஊருக்கு வரியும் செலுத்தவில்லை. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிச்சையா உடல்நிலை சரியில்லாமல் 11-ந் தேதி இறந்துவிட்டார். இவருடைய உடலை நடுப்பிள்ளையார்குளம் அருகே அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து அவருடைய உறவினர்கள் அங்குள்ள இடத்தில் பிச்சையாவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை ஊர் மக்கள் தடுத்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள ஒரு இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பிச்சையா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மானூர் போலீசார் நடுப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த நாட்டாண்மை சுப்பிரமணியனை (40) கைது செய்தனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த 84 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் பங்களாவிற்கு திரண்டு வந்து, முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நடுபிள்ளையார்குளத்தை சேர்ந்த கண்ணன், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சுரேஷ், பாலாஜிகிருஷ்ணசாமி, இந்து முன்னணி நிர்வாகிகள் குற்றாலநாதன், விக்னேஷ் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு 5 வேன்களில் நேற்று வந்தனர். அவர்கள் தங்கள் மீது போலீசார் போட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெண்கள் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அங்கே தரையில் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், போலீசார் எங்கள் ஊர் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். சுப்பிரமணியத்தை கைது செய்து உள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story