போலி நியமன ஆணை மூலம் தொழிலாளர்களை பணியில் சேர்த்த அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
போலி நியமன ஆணை மூலம் தொழிலாளர்களை பணியில் சேர்த்த அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் சிலர் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்ததன்பேரில் ஊழியர்களின் பணிப்பதிவேடு, சான்றிதழ்கள் ஆகியவை சரியாக உள்ளதா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணையில் செஞ்சி தாலுகா நெகனூர்புதூர் கிராமத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 30), கண்டாச்சிபுரம் தாலுகா அடுக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (32) ஆகியோர் திண்டிவனத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும், செஞ்சி பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (31) கள்ளக்குறிச்சி பணிமனையிலும் போலி ஆவணங்கள் கொடுத்து ரிசர்வ் கண்டக்டர்களாக பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் இவர்கள் 3 பேரிடம் இருந்தும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (நிர்வாகம்) குமார் (49) என்பவர் தலா ரூ.3½ லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகள் வழங்கி பணியில் சேர்த்ததும், இதற்கு குமாருக்கு உடந்தையாக தொழில்நுட்ப இளநிலை உதவியாளரான விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டை சேர்ந்த பிரகாசம் மகன் கார்த்திகேயன் (36), புதுச்சேரி பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வரும் செஞ்சி மாவட்டம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்த் (38) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் டைட்டஸ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை மேலாளர் குமார் மற்றும் கோகுலகிருஷ்ணன், ஜெயபால், வெங்கடேசன், கார்த்திகேயன், ஆனந்த் ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று குமாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விழுப்புரம் பானாம்பட்டு பாதையில் உள்ள குமாரின் வீட்டில் நேற்று மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், அண்ணாதுரை மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது வழக்கு சம்பந்தமாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழகத்தில் யார், யார் போலி நியமன ஆணைகள் மூலம் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்து மீண்டும் இன்று (புதன்கிழமை) குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Related Tags :
Next Story