12 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு தொடங்கியது.
திருச்சி,
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவு ஏறகனவே நடைமுறையில் உள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவு சாப்ட்வேரில் கடுமையான விதிமுறைகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக ஆன்லைன் அல்லாத முறையில் பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் சென்னையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஆன்லைன் பத்திரப்பதிவிற்கான எளிமைப்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். பிப்ரவரி 13-ந்தேதி முதல் புதிய இணையதளம் மூலம் தான் பத்திரப்பதிவுகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் எளிமைப்படுத்தப்பட்ட புதிய சாப்ட்வேர் மூலம் பத்திரப்பதிவுகள் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 12 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த 12 அலுவலகங்களிலும் நேற்று எளிமைப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வங்கி கடன் தொடர்பான புரிந்துணர்வு ஆவணங்களை பதிவு செய்வதில் பிரச்சினை இருந்ததாக வழக்கறிஞர்கள் புகார் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் சுடர் ஒளியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் சொத்து பத்திரங்கள் அதிக அளவில் பதிவுக்காக தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சராசரியாக 4 முதல் 5 வரையிலான பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய ‘போர்ட்டல்’ செயல்பாட்டுக்கு வரவில்லை என்று சில வழக்கறிஞர்கள் புகார் செய்தனர். அந்த புகார்கள் நேற்று மதியத்திற்கு பின்னர் சரி செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story