வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் போக்கை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் போக்கை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர்.
விழுப்புரம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் மூர்த்தி வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. சம்மேளன துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க பேரவை தலைவர் நந்தகோபால், மறுமலர்ச்சி தொழிற்சங்க பேரவை செயலாளர் மனோகரன், பணியாளர் சம்மேளன பேரவை தலைவர் ஷாஜகான், ஐ.என்.டி.யு.சி. பேரவை துணைத்தலைவர் ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கும் போக்கினை கண்டிப்பது, ஊதிய உயர்வு 2.57 காரணியாவது வழங்க வேண்டும், 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 1998 ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஞானமூர்த்தி, அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் தவமணி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், பணியாளர் சம்மேளன தலைவர் துரைராஜ், திராவிட தொழிலாளர் சங்க நிர்வாகி கோபண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story