கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கினார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; வெல்டர் கைது
பெங்களூருவில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வெல்டரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வெல்டரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர். இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி
பெங்களூரு காமாட்சிபாளையாவில் உள்ள கொட்டிகேபாளையா பஸ் நிறுத்தத்தின் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு 2 மர்மநபர்கள் சென்றனர். ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார். இன்னொரு நபர் ஏ.டி.எம். மையத்தின் வெளியே நின்று யாராவது வருகிறார்களா? என்பதை பார்த்து கொண்டிருந்தார்.
இந்த வேளையில், காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தின் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, போலீஸ்காரர் பீலப்பா ஆகியோர் ஒய்சாலா வாகனத்தில் அந்த பகுதியில் கண்காணிப்பு பணிக்காக வந்தனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரும் அங்கிருந்து ஓடினார்கள்.
வெல்டர் கைது
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் விரட்டி சென்றனர். அதில் ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். கைதானவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் கொட்டிகேபாளையாவை சேர்ந்த ஹரீஷ்(வயது 35) என்பதும், அவர் வெல்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
முன்னதாக, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஹரீஷ் பணி செய்ததும், இதனால் கிடைத்த அனுபவத்தால் அவர் ஏ.டி.எம். எந்திரம் செயல்பாடு குறித்து நன்கு அறிந்து இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஹரீசின் கூட்டாளியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story