தென்சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 26 பேர் கட்சியில் இருந்து நீக்கம்


தென்சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 26 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

தென்சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– 

கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்களின் விவரம் வருமாறு:– 

ஆர்.தெய்வேந்திரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), ஏ.ராஜா (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர்), எம்.ரவிச்சந்திரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்), பி.அர்ச்சுனன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), மெர்குரி மணி (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), ஏ.சுலைமான் ராஜா (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்), வி.சுகுமார்பாபு (சென்னை மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்), கே.சி.விஜய் (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர்). 

Next Story