சென்னையில் நடந்த கருத்தரங்கில் பெண்களுக்கு தொழில் முனைவோர் விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


சென்னையில் நடந்த கருத்தரங்கில் பெண்களுக்கு தொழில் முனைவோர் விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 14 Feb 2018 5:00 AM IST (Updated: 14 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த கருத்தரங்கில் பெண்களுக்கான தொழில் முனைவோர் விருதை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மகளிர் மற்றும் மாணவ–மாணவிகளுக்கான மாநில கருத்தரங்கு சென்னை தியாகராயநகரில் நடந்தது. சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். 

கருத்தரங்கில் வங்கி கடன், மகளிருக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள், உத்யோக் ஆதார் பதிவு, வரி மசோதா குறித்த விளக்கங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து பெண்களுக்கான தொழில் முனைவோர் விருதை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. 

இந்த கருத்தரங்கில் ஆதி என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் சரண்யா சரண், தனியார் வங்கி பொது மேலாளர்கள் ஸ்ரீமதி, ஸ்ரீதர், இசபெல்லா, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், ரிசர்வ் வங்கி முன்னாள் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story