மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
ரெயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது. ரெயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களை ரெயில்வே துறையில் மீண்டும் நியமிக்கக்கூடாது. ரெயில் கட்டணத்தை உயர்த்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இதனால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக நேற்று காலை கண்டோன்மெண்ட் போலீசார், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் தீபா தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட சங்கத்தினர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.
இதனைக்கண்ட போலீசார் அவர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு தடுப்பு கம்பிகள் வைத்தும், கயிறு கட்டியும் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்து, வேனில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் போராட்டக்காரர்கள் 11 பேர் போலீசாரின் பிடியில் சிக்காமல் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ரெயில் நிலையத்துக்குள் வேகமாக ஓடினர். அவர்களை பிடிக்க போலீசார் ஓடியதை ரெயில் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 6 பேர் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை தண்ட வாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆனால் அந்த தண்டவாளத்தில் ரெயில் இல்லை. இதனால் போராட்டக்காரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களையும் போலீசார் பிடித்து சென்று வேனில் ஏற்றினர். ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த 4 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 42 பேரை போலீசார் கைது செய்து, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story