காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:00 AM IST (Updated: 14 Feb 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 33) என்பவரை பிடித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின்பேரில் சின்னசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரக பகுதியில் வனச்சரக அலுவலர் செல்வம் தலைமையில் வனவர் வி.வெங்கடேசன், வனக்காப்பாளர்கள் கே.சங்கர், சண்முகம், என்.சின்னசாமி மற்றும் வனக்காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட சிறப்புக்குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிக்கனஅள்ளி சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 33) என்பவரை பிடித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின்பேரில் சின்னசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராததொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. காப்புக்காடுகளில் நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் திருமால் எச்சரித்து உள்ளார். 

Next Story