ஓசூர் வனப்பகுதிக்கு மேலும் 10 யானைகள் வருகை 76 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்
ஓசூர் வனப்பகுதிக்கு மேலும் 10 யானைகள் வந்துள்ளது. தற்போது 76 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக 11 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி 35 யானைகளும், நேற்று முன்தினம் 20 யானைகளும் ஓசூர் வனப்பகுதிக்கு வந்துள்ளன. இவைகள் வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து மேலும் 10 யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இதனால் ஓசூர் வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஓசூர் சானமாவு, போடூர்பள்ளம் காடுகளில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து ஒரு ஆண் யானை மட்டும் தனியாக பிரிந்து சுற்றுகிறது. இந்த ஒற்றை யானை கோபசந்திரத்தையொட்டி உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகில் தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ளது.
இந்த யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் 76 யானைகளில் 30 யானைகள் நேற்று முன்தினம் இரவு ஆழியாளம் வழியாக ராமாபுரம் பகுதிக்கு சென்றன. பின்னர் இந்த யானைகள் கூட்டம் அங்கிருந்து பத்தாகோட்டா கிராமத்திற்கு சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினார்கள்.
ஓசூர் வனப்பகுதிக்கு யானைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானைகள் வனப்பகுதிகளில் ஆங்காங்கே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த 76 யானைகளையும் ஒன்றாக சேர்த்து தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story