200 புதிய மினி ஏ.சி. பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் இயக்க மாநகராட்சி திட்டம்


200 புதிய மினி ஏ.சி. பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் இயக்க மாநகராட்சி திட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:47 AM IST (Updated: 14 Feb 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில், ஆகஸ்ட் மாதம் முதல் 200 புதிய மினி ஏ.சி. பஸ் சேவையை தொடங்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மும்பையில், ஆகஸ்ட் மாதம் முதல் 200 புதிய மினி ஏ.சி. பஸ் சேவையை தொடங்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மினி ஏ.சி. பஸ்கள்

மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள பெஸ்ட் குழுமம் சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், அதிகளவு நஷ்டத்தில் இயக்கப்படுவதாக கூறி கடந்த ஆண்டு ஏ.சி. பஸ் சேவையை பெஸ்ட் குழுமம் முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது பெஸ்ட் குழுமம் சார்பில் சாதாரண பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் 450 புதிய பஸ்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில், 200 ஏ.சி. மினி பஸ்கள் ஆகும். 200 சாதாரண மினி பஸ் மற்றும் 50 நடுத்தர நீளம் கொண்ட பஸ்கள் ஆகும்.

ஆகஸ்ட் மாதம் முதல்...


இந்த ஒப்பந்தம் 2 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பஸ்களை இயக்கும் ஒப்பந்ததாரருக்கு ஏ.சி. மினி பஸ்சுக்கு கி.மீ.க்கு ரூ.48-ம், சாதாரண மினி பஸ்சுக்கு கி.மீ.க்கு ரூ.40-ம், நடுத்தர நீளம் கொண்ட பஸ்களுக்கு ரூ.45-ம் வாடகையாக வழங்கப்படும். பஸ்சுக்கான எரிபொருள், டிரைவர், பராமரிப்பு செலவுகளை ஒப்பந்ததாரரே செய்யவேண்டும்.

இது குறித்து பெஸ்ட் குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ஏ.சி. மினி பஸ் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Next Story