தாதுவள நிறுவனத்தில் அதிகாரி வேலை


தாதுவள நிறுவனத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 14 Feb 2018 10:52 AM IST (Updated: 14 Feb 2018 10:52 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக என்.எம்.டி.சி. என அழைக்கப்படுகிறது.

தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் இளநிலை அதிகாரி, மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு 87 பேரையும், மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட், எச்.இ.எம். உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு 169 பேரையும் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 256 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

169 அலுவலக பணியாளர்கள்

அதிகாரி அல்லாத அலுவலக பணிகளில் எலக்ட்ரீசியன், எச்.இ.எம். (மெக்கானிக்), மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் (மெக்கானிக், எலக்ட்ரிக்), எச்.இ.எம். ஆபரேட்டர், கியூ.சி.ஏ. ஆகிய பணிகள் உள்ளன.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10-3-2015-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

வெல்டிங், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி, ஜியாலஜி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம்.

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, பணித்திறன் சோதனை உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் 19-2-2018-ந் தேதிக்குள் Post Box No. 1383, Post office, Humayun Nagar, Hyderabad, Telangana State, Pin500028 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

87 அதிகாரி பணிகள்

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி, ஜூனியர் ஆபீசர், மேலாளர் போன்ற பணிகளுக்கு 87 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 33 பணிகள் எக்சிகியூட்டிவ் அதிகாரி தரத்திலான பணியிடங்களாகும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு இன்றைக்குள் (12-2-2018-ந் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.nmdc.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story